என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் கண்காணிப்பு
நீங்கள் தேடியது "போலீஸ் கண்காணிப்பு"
ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் மீதும் சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரணை நடத்துகிறது. இதில் ஏதேனும் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. #Sterlite
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த இருமனுக்கள் மீதும் விசாரித்த சுப்ரீம் கோர்ட் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஆலையை திறக்க அனுமதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்தது. அந்த மனுமீதான விசாரணை கடந்த 24-ந் தேதி நடந்தது.
அப்போது அரசு தரப்பு மற்றும் ஸ்டெர்லைட் தரப்பு வக்கீல்கள் வாதாடினர். மேலும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் வாதாடினார்.
தொடர்ந்து வாதிட்ட ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வக்கீல், ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கவும், ஆலையை திறக்க இடைக்கால உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனவும், ஏற்கனவே ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் நாளை (29-ந் தேதி) மொத்தமாக விசாரித்து விரைவில் தீர்ப்பளிப்போம் என்று நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள் மீதும் சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரணை நடத்துகிறது. இதில் ஏதேனும் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை பகுதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் பண்டாரம்பட்டி, குமாரபுரம் உள்ளிட்ட கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 18 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் சஸ்பெண்டு செய்யப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள் வராத காரணத்தால் 205 பள்ளிகள் மூடப்பட்டன. இன்று பணிக்கு வராத ஆசிரியர்கள் கணக்கிடப்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு இன்று மாலை நடைபெறும். பகுதி நேர ஆசிரியர் பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 2600 பேர் விண்ணப்பம் வழங்கி உள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite

தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானம் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். #Drone
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும், நாளையும் கூட்டம் அலைமோதும்.
இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரையில் மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தினமும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தி.நகரில் மக்கள் கூடும் இடங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் பாதுகாப்பு பணிகள் இன்று தொடங்கின.
தி.நகர் பஸ் நிலையம், போத்தீஸ் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் சிறிய கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் புகுந்து திருடும் கொள்ளையர்களின் 50-க்கும் மேற்பட்ட போட்டோக்களை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். பேஸ் டிடெக்டிவ் என்கிற கண்டு பிடிப்பு முறையில் புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடும் எண்ணத்தில் எந்த குற்றவாளியாவது மாம்பலம் பகுதியில் ஊடுருவினால் நிச்சயம் போலீசில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் தப்ப முடியாது.
தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானமும் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். இதன் மூலம் போலீசார் பணியில் இல்லாத இடங்களிலும் கூட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.
தீபாவளி பாதுகாப்பில் இன்னொரு சிறப்பு ஏற்பாடாக போலீசாரின் சீருடையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 போலீசாரின் சீருடைகளில் கேமராக்களை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பொருத்திவிட்டார். இந்த போலீசார் பணியில் ஈடுபட்டிருக்கும்போது கேமரா இயங்கிக் கொண்டே இருக்கும். போலீசாரின் எதிரே நின்று பேசுபவர்களின் குரலும், போலீசின் குரலும் அதில் பதிவாகும்.
ஜி.பி.எஸ். கருவியுடன் கேமரா இணைக்கப்பட்டிருப்பதால் போலீஸ்காரர் எங்கு இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் போலீசார் யாராவது தவறு செய்திருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
இது தவிர 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 8 இடங்களில் கண்காணிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. #Drone
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு இன்றும், நாளையும் கூட்டம் அலைமோதும்.
இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரையில் மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தினமும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் தி.நகரில் மக்கள் கூடும் இடங்கள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போல் பாதுகாப்பு பணிகள் இன்று தொடங்கின.
தி.நகர் பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் உடமைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வலம் வரும் இந்த கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெரு உஸ்மான் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த விழாவில் கூடுதல் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் புகுந்து திருடும் கொள்ளையர்களின் 50-க்கும் மேற்பட்ட போட்டோக்களை போலீசார் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். பேஸ் டிடெக்டிவ் என்கிற கண்டு பிடிப்பு முறையில் புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருடும் எண்ணத்தில் எந்த குற்றவாளியாவது மாம்பலம் பகுதியில் ஊடுருவினால் நிச்சயம் போலீசில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் தப்ப முடியாது.
தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆள் இல்லாத விமானமும் இந்த ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த சிறிய விமானத்தை அண்ணா பல்கலை கழக தொழில்நுட்ப குழுவினரிடமிருந்து போலீசார் வாங்கி உள்ளனர். இதன் மூலம் போலீசார் பணியில் இல்லாத இடங்களிலும் கூட்டத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.
ஜி.பி.எஸ். கருவியுடன் கேமரா இணைக்கப்பட்டிருப்பதால் போலீஸ்காரர் எங்கு இருக்கிறார்? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் போலீசார் யாராவது தவறு செய்திருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
இது தவிர 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 8 இடங்களில் கண்காணிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. #Drone
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Section144 #Sengottai
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது.
அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது,
இந்நிலையில் மறுநாள் இருதரப்பினரிடமும் கலெக்டர் ஷில்பா தலைமையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கருத்துகேட்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் மீண்டும் தென்காசி, செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ந் தேதி மாலை 8 மணி முதல் இன்று 22-ந் தேதி காலை 6 மணி வரை தொடரும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்காலங்களில் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்துவதற்கும் வேறு எந்தவிதமான ஆர்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தவொரு இடத்திலும் மேற்குறிய நோக்கத்திற்காக 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி.க்கள் தனபாலன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், வெற்றி செல்வன், பழனிகுமார் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். #Section144 #Sengottai

இதை தொடர்ந்து செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும் தென்மண்டல போலீஸ் ஜ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
இந்நிலையில் இன்று காலையுடன் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது செங்கோட்டை நகராட்சி, புதூர், பண்பொழி, வல்லம், பிரானூர் பார்டர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, புளியரை, சுமை தீர்த்தபுரம், தெற்கு மேடு, தேன் பொத்தை, கணக்குபிள்ளை வலசை ஆகிய பஞ்சாயத்துகளில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இக்காலங்களில் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்துவதற்கும் வேறு எந்தவிதமான ஆர்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தவொரு இடத்திலும் மேற்குறிய நோக்கத்திற்காக 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி.க்கள் தனபாலன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், வெற்றி செல்வன், பழனிகுமார் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். #Section144 #Sengottai
ஆரல்வாய்மொழி அருகே போலீஸ் கண்காணிப்பில் எஸ்.ஏ. ராஜா மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மறைந்த எஸ்.ஏ. ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா (வயது 55). இவர், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ஜான்சல் ராஜா ஆரல்வாய்மொழி அருகே உள்ள கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இவரை ஒடிசா மாநில போலீசார் வழக்கு ஒன்றில் கைது செய்து நாகர்கோவில் ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஜான்சல் ராஜாவை வருகிற 30-ந்தேதி ஒடிசா கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜான்சல் ராஜா திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஜான்சல் ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒடிசா மாநில போலீசாரும் குமரி மாவட்ட போலீசாரும் ஜான்சல் ராஜா சிகிச்சை பெறும் வார்டின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் கண்காணிப்பில் அவருக்கு இன்று 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரை ஒடிசா மாநில போலீசார் அங்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ஜான்சல் ராஜாவின் வக்கீல்கள் மதுரை ஐகோர்ட்டில் அவருக்கு ஜாமீன் கேட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.
×

X